Monday, September 5, 2011

10. இயல்பு நிலை









10. இயல்பு நிலை

``மனித இயல்பு நிலையை உணர்ந்து, ஆற்றல் நிரம்பிய மனித இயல்புணர்வை நோக்கி பயணம் செய்ய நாம் முடிவெடுப்போம்’’.

இயல்புணர்வின் அனபவங்கள் ஆழ்மனத்தில் நுழைந்த போது, அவை உங்கள் இயல்பு எது என்பதை நிர்ணயிக்கத் தொங்குகிறது. எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய, தனக்கே இயல்பாக உள்ள ஆற்றலைக் கண்டறியக் கூடிய, அதற்கே உரிய இயல்பான சிந்தனைத் திறனால் சிந்திக்கக் கூடிய திறனைச் சுதந்திரமாக வளர்க்கத் தொடங்கிவிடுகிறது.

ஒவ்வொருவரும் தங்களுள் இயற்கையாக அமைந்துள்ள இயல்பு நிலையை அறிந்து கொள்வதைப் போன்ற சாதனை எதுவும் இல்லை. தன்னைத் தானே உணர்வது வாழ்க்கையின் பெரிய செயல்பாடாகும். விலங்குகள் இயல்பு நிலையில் அடிப்படையில் அவைகள் வாழ்கின்றன. இந்த இயல்பை அறிந்து கொள்ளவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ முடியாது. ஏதேனும் ஒருவகையில்தன் இலக்கை அடைய செய்கின்றன. அது ஓர் அமைப்புத் திட்டத்தைப் போல செயல்படுகிறது. விலங்குகள் பிறக்கின்றன, வாழ்கின்றன இயல்பைப் பற்றியெல்லாம் அவை ஒரு போதும் சிந்திப்பதில்லை. அதை அவை வெறுமனே தொடர்ந்து செய்கின்றன.

விலங்குகள் சிந்திப்பதற்கும், மனிதர்கள் சிந்திப்பதற்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன. இயல்பு நிலையில் அடிப்படையில் வாழ்வதைக் காட்டிலும் தன்னியல்பை சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்வது சிறந்தது. இதற்கான சாத்தியக் கூறுகளுக்கு எல்லைகள் இல்லை. சுதந்திராகக் காற்றுக் கொள்ளவும், வளரவும், சோதிக்கவும், படைக்கவும் நாம் அறிவோம். தெரிந்து விழக் கூடிய அறிவுத் திறனை நம்முடைய மூளை பெற்றிருக்கிறது. நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள நாம் அறிவோம். ஒரு குறிப்பிட்ட தேர்வு ஒரு குறிப்பிட்ட விளைவைத் தரும் என்பது நமக்குத் தெரியும். இந்த மண்ணில் நம்முடைய இருத்தல் நிலைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்க முடியும். இதற்கப் பிறகு, நாம் எதைச் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும் என்றுகூட நாம் யாராக இருக்க விரும்புகிறோம். அப்படி இருப்பதற்குத் தேவையான ஆற்றல் நம்மிடம் உண்டு.

மானுட வாழ்வின் இறுதிக் குறிக்கோளாகிய இயல்பு நிலையை எண்ணிப் பார்க்கவும் நோயில்லாமல் எந்திரமாக இயங்குகின்றோம். இன்றைய மனிதன் எங்கிருந்து வந்தோம்; எதற்காக வாழ்கின்றோம்; எப்படி வாழ்கின்றோம்-என்று எண்ணிப் பார்க்கின்ற மனிதன் தன் வாழ்வுக்கப் பொருளை காண்கின்றோம். துன்பம் கலவாத இன்பத்தையும், குறை காணாத நிறைவையும் பெற முயலுகின்றான். எவற்றையெல்லாம் நிலையானவை என்று கருதினானோ அவையெல்லாம் கால வெள்ளத்தால் கனாக்க முடியாத உறுதிப் பொருளை நோக்கி ஒடுகின்றான். ஓடி ஒய்ந்தவன் தன்னுள்ளேயே அந்த இயல்பு பொருளை இயல்பு நிலையில் காண்கின்றான். தன் அறியாமையை எண்ணி நாணுகின்றான். காலத்தை வீனோ கழித்து விட்டதற்காக வருந்துகின்றான். அந்த இயற்கையின் இயல்பான ஒரு கூறு மனிதன். இவ் இயல்புநிலை போக்கை அமைதியாக ஏற்று நிறைவாக வாழ்ந்திட வேண்டும்.

தன் இயல்புநிலையை அறிந்துணர்ந்து அதில் ஐக்கியமாவதே உயர்ந்தநிலை வேறு ஒரு சாதனை தேவையில்லை. சரணாகதி தான் விமோசனம் உங்களை நீங்கள் அறியுங்கள் அதான் இங்கு சொல்லப்பட்டுள்ளது. உங்களை அறிவதுதான் இறைவனை அடைவதற்கான வாயில் வேறு ஒன்றும் கிடையாது. ஆகையினால் உங்களுக்குள் நீங்கள் பயணம் செய்யத் துவங்க வேண்டும்.

``இயல்புணர்வுகளின் அனுபவங்கள் ஆழ்மனத்தில் நுழைந்த போது அவை உங்கள் இயல்பு நிலை எது என்பதை நிர்ணயிக்கத்  தொடங்குகிறது’’.

9. ஆத்ம இயல்பு விடுதலை


9. ஆத்ம இயல்பு விடுதலை

``நான் என்ற இயல்பை நீ உணர்ந்து `நான்என்று நீ இயல்போடு ஒன்று கலப்பது’’.

இயற்கை தனக்கே உரிய விதத்தில் பரிணாமத்தின் இடைநிலையில் மனிதன் இருக்கின்றான். இதனால் இந்த மானிடப் பிறப்பை அறிந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

இயற்கையோடு போராடிக் கொண்டிருக்கும் வரைதான் மனிதன் இன்பதுன்பம் எல்லாம். இயற்கையோடு இயல்பை நோக்கி குவியும் போது ஓர் நிஜமான அனுபவம் ஏற்பட்டு நமது பார்வை உள்முகமாக சென்று உங்களுக்குள் நீங்கள் செல்லும் போது ஆத்ம இயல்பு நிலையை அறியச் செய்கிறது. இதுதான் நிலையான இயல்பு நிலையை அடைவதற்கான வாயில் வேறு ஒன்றும் கிடையாது. ஆகையினால் உங்களுக்குள் நீங்கள் பயணம் செய்யத் துவங்குங்கள். இந்த இயல்பு நிலையில் உள்ள உண்மையான இயல்பைப் பற்றி நமக்கு தெரியவரும். இதனால் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு அது உதவுகின்றது.

உங்கள் ஆத்ம இயல்பு எப்போதும் மாறுவதில்லை. அது மறைக்கப்பட்டு இருக்கின்றது அவ்வளவுதான். உடல் ஒருபொருள், மனம் வேறு பொருள் என்று சொல்வதற்கு இல்லை. அவை ஒரே பொருளின் வேறுப்பட்ட நிலைகள்தான். அதுபோல நமது இயல்பும் பரம்பொருளின் இயல்பும் வெவ்வேறு என்று அல்ல இவை ஒரே பரம்பொருளின் வேறுபட்ட நிலைகள்தான்.

                பரம்பொருளின் இயல்பின் வெளிப்பாடுகள் இந்த இயல்புகளின் மிகச்சிறந்த நிலையே மனிதன். அங்கிருந்து வந்த இந்த இயல்பு திரும்பிக் சென்றேயாக வேண்டும். அவரைப் பரம்பொருள் என்றோ, கடவுள் என்றோ, சுத்த பிரம்மம் என்றோ, நிலையான இயல்பு நிலை என்றோ கூறிக் கொள்கின்றோம். இந்த இயல்பு நிலையை அறிவதுதான் பரிணாமத்தின் உண்மை ரகசியம்.

ஆத்ம இயல்பு நிலையின் விடுதலை என்பது ஒலி, ஒளி, உருவம், சுவை, தொடு, உணர்ச்சி அனைத்தையும் கடந்து இயற்கையையும் கடந்து தனிப்பொருளாக எல்லையற்றதாக ஆதி அந்தம் இல்லாததாக மாறுதலே அடையாததாக உள்ள பரம்பொருளை உணர்ந்து ஐக்கியமாவதும் ஆகும். இதன் கருத்து நம் அறிவுக்கு எல்லாம் அப்பாற்பட்டதாகும். நுட்பத்தின் மிக நுட்பமானதும், சூட்சுமத்தில் சூட்சமமானதுமாகும்.

       தண்ணீரினுடைய நிலையில் இருந்து பார்த்தால் அலைக்குள் இருப்பதும் சமுத்திரத்திற்குள் இருப்பதும் தண்ணீர் தான். சமுத்திரத்தின் நிலையை இருந்து பார்த்தாலும் இரண்டும் ஒன்றேதான். அங்கே சமுத்திரமும் இல்லை, அலையும் இல்லை. ஆனால் அலையினுடைய நிலையில் இருந்துப் பார்த்தால் உங்களுக்கு தண்ணீரே கிடையாது தெரிந்து கொள்ளுங்கள், தண்ணீர் தெரிந்தால் தான் விஷயம் பூராவும் மாறிப் போய்விடுகிறது. அலையினுடைய நிலையில் இருந்து பார்க்கும் பொழுது நீங்கள் சின்ன அலை அல்லது பெரிய அலை நீங்கள் அலை என்று நினைக்கிற வரைக்கும் உங்களுக்கு சமுத்திரம் இருக்கிறது. அலைக்கான பாவத்தை வைத்துக் கொண்டு இயல்பை அறியமுடியாது. தண்ணீராக ஆகிவிடும் போதுதான் நமது இயல்பால் அவரை அடைவது அதாவது இயல்பான நிலையை அடைவது சாத்தியமாகும். சமுத்திரத்தின் உட்பொருளையும் சேர்த்து தெரிந்து கொள்வது இயல்பு நிலை.

                இதன் உட்பொருள் தண்ணீர் °வரூபத்தை அடையும். அதுபோலப் பகுத்தறிவு, தியானம், ஆத்ம பிரார்த்தனை, உண்மைக்கு மாறாத பக்தி, அன்பு, சேவை, தொண்டு இவற்றின் சீரான பயிற்சியால் பிரகாச நிலைக்கு அப்பால் வந்த ஒரு மெய்ப் பொருளுடன் ஒன்றி நிற்கும் வாழ்க்கை பெறப்படுகிறது. அந்த வழியில் சாதகன் ஒவ்வொரு நிலையாக நிறைவடைகிறான். நிலையில்லா அற்ப சந்தோஷத்தில் இருந்து விடுபடுகிறான். திடத் தன்மை அடைகிறான். அவன் எந்த பேரின்பமான நிலையில் தன்னை மறந்து முழுக்கக் கற்றுக்கொண்டு விட்டானானால் உயர்வற்ற உயரும் உண்மையை அனுபவிக்கத் தொடங்குகின்றான்.

                இந்த நொடி உணர்வுதான் சுத்த தன் இயல்பு அல்லது மெய்ப்பொருளைப் பற்றிய பாதிப்பற்ற சிந்தனையைத் தரமுடியும். அந்த இயல்பு அனுபவம்தான் வாழ்க்கையில் தெய்வீக குறிக்கோளைப் பெறுவதாகும்.

                இயல்பு என்பது இரண்டல்ல ஒன்றுதான். அறிகின்ற இயல்பும், அறிய வேண்டிய இயல்பும் ஒன்றாக இயல்புநிலை. நம்முடைய தூய இயல்புணர்வால் தன் சொரூபத்தை அறிந்து கொண்ட பிறகு அதிலேயே நிலைத்திருப்பது சிறப்பு. மெய்ப் பொருளின் இயல்பை தனது இயல்பின் இயல்பாக தனது இயல்பை காண்பவர் யாரோ அவரே சுதந்திரமானவர், ஆனந்தமயமானவர். குறிக்கோளை அடைந்தவர்தான் இந்த நிலையே இயல்பு நிலை. இந்த நிலையில் பிறப்பற்ற நிலையை அடையலாம், பிறவி பெரும் பயனை அடையலாம்.

                ஆத்ம இயல்பை சிந்தனை செய்து அவரை அனுபவரீதியாக உணர்வதையே நமது வாழ்வின் குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது `நாம் உண்மையில் இரண்டற்ற பரம்பொருள்என்று நேரிடையாக அறிந்து இந்த ஜன்மத்தையே கடைசி பிறவியாக்கிக் கொள்ள நாம் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் நாம் மனிதனாக இருக்கும், என்று சாதகன் உணர்ந்து நம்மிடம் உள்ள குண்டலினிச் சக்தியை விழிப்படையச் செய்து, மாயையில் இருந்து விடுபட்டு ஆத்மாவை அறிந்து, ஆத்ம இயல்பு விடுதலைக்காக அயராது செயல்பட வேண்டும்.

``நாம் அவரிலிருந்தே தோன்றினோம், அவரிலேயே வாழ்கின்றோம். அவரிடமே திரும்புவோம்’’.

8. இந்த மானிடப் பிறப்பை அறிதல்







8. இந்த மானிடப் பிறப்பை அறிதல்

``இயற்கை தனக்கே உரிய விதத்தில் பரிணாமத்தின் கடை நிலையில் மனிதன் இருக்கின்றான். இதனால் மானிடப் பிறப்பை விடுவித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது’’.

நாம் அனைவரும் ஆத்ம விழிப்பில் அனுபவம் அடைந்து தெய்வீகக் குறிக்கோளை அடைய இந்தப் பிறப்பை உணர்ந்து கொள்வது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.

இயற்கை உயிரினங்களை மேம்படுத்துவதில் நாட்டம் கொண்டுள்ளது. அதை அறிந்து கொள்ளவில்லை. மனித உயிரனத்தின் வடிவில் இயற்கை உருவாக்கியுள்ளது. மனிதன் தெய்வீகமானவன், நமது இயல்பு தெய்வீகம் என்பதுதான். எல்லா பிறவிகளையும்விட உயர்ந்தது மனிதப் பிறவி. இந்தப் பிறவியில் மட்டுமே இயல்புணர்வால் தன் இயல்பை உணரும் திறன் கிடைத்துள்ளது. வேறு எந்த உயிரினத்திற்கும் தன் இயல்புணர்வை அறியும் திறனில்லை. எனவே, மனிதன்தான் படைப்புகளிலேயே மிகச் சிறந்தவன்.

இந்த மானிடப் பிறப்பில் எல்லா முன்னேற்றமும் ஆற்றல்களும் ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்கனவே உள்ளன. அது தன் போக்கில் வெளிப்படுவது தடுக்கப்படுகிறது அவ்வளவு தான். இந்தத் தடைகளை நீக்கினால் இயற்கை முன்னே பாய்கிறது. அவன் தன்னிடம் ஏற்கனவே உள்ள ஆற்றல்களை அடையப் பெறுகின்றான்.

நாம் எவ்வளவோ பிறவிகள் எடுத்தாகிவிட்டது. இதற்கு முன் பிறவிகளில் நாம் ஞானம் சம்பாதிக்கவில்லையா? என்று கேட்டால் சம்பாதித்திருந்தால் நாம் இப்போது பிறவி எடுத்திருக்க முடியாது. ஆகவே நாம் எல்லாம் ஞானிகள் அல்ல என்றால் நாம் என்ன அவ்வளவு முட்டாள்களா? நாம் முட்டாள்களும் இல்லை. எதற்கும் நிறையத் தகுதிகள் வேண்டும். மனிதனுக்கு மனிதப் பிறவி என்பதே விசேஷம். நாம் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். புழுவாய், விலங்காய், பறவையாய், மனிதனாய் இப்படி மாறி மாறிப் பிறவிகள் எடுத்துள்ளோம். இந்தப் பிறப்புகளில் மனிதப் பிறப்பும் கிடைத்திருக்கலாம். ஆனால் அதில் சரியான விழிப்புணர்வு இன்மையால் திரும்பவும் இம்மனிதப் பிறப்பு பரம்பொருளின் அருளால் கிடைத்திருக்கின்றது. இந்தமானிடப் பிறப்புக்குப் பிறகும் ஜன்மம் வருவதற்கு நியாயமே இல்லை. அப்படிப்பட்ட உயர்ந்த இந்த மானிடப் பிறப்பின் உண்மையான நிலையை அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். நம் உண்மையான °வரூபம் ஆத்மாவின் இயல்புதான். நாம் இயல்பை மேலோட்டமாகப் பார்ப்பதால் நமக்கு ஒரு பயனுமில்லை. நாம் பரம்பொருளின் இயல்பின் வெளிப்பாடுகள் இந்த இயல்புகளின் மிகச் சிறந்த நிலையே மனிதன்.

மனிதன் தன் செயல்களினால் தானே தன்னை உத்தமனாக்கிக் கொள்ளலாம். அல்லது தன்னைக் கெடுத்துக் கொள்ளவும் செய்யலாம். இவ்வாறு செய்வதற்கு எல்லாம் மனிதனுக்குப் பகுத்தறிவு உண்டு. வேறு எந்த ஜீவனுக்கும் இவ்விதப் பகுத்தறிவு கிடையாது. ‘இது நல்லதுஎன்று புரிந்து கொண்டு அதைச் செய்யும் தகுதியோ, ‘இது தவறுஎன்று புரிந்து கொண்டு ஒரு செயலைத் தவிர்க்கும் தகுதியோ மற்றப் பிராணிகளுக்குக் கிடையாது. அதனால் மனிதப் பிறப்பில் இயல்பை அறியும் முயற்சியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். நமக்குக் கிடைத்த இந்த மானிடப் பிறப்பை நன்கு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் இருக்கும் இயல்பை அறிவால், நினைவால் உணருங்கள்; அதனால் அறிவு தெளிவடையும்; அறியாமை அகலும்.

நானே ஆத்மா, அதன் இயல்பே நான்எனச் சொல்லுங்கள். அதுதான் உண்மை. உலகில் எல்லையற்ற ஆற்றல் உங்களுக்கே சொந்தமானது. மூடநம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். உண்மையை அறியுங்கள். உண்மையை கடைப்பிடிக்கும் வழிகளிலேயே சென்று கொண்டிருங்கள், இயல்பை அடையும் வரை.

இந்த மனிதப் பிறவிதான் நமக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு. இந்த மானிடப் பிறப்பில்தான் பிறவி இல்லாப் பெரு நிலையை அடைய முடியும். மற்ற எந்த ஜீவராசிகளும் இந்த நிலையை அடைய முடியாது. அப்படிப்பட்ட மிக உயர்ந்த நிலைக்காக நிறைவுடன் செயல்பட்டுக் கொண்டே இருப்போம்.

இந்த உலகம்தான் பிரபஞ்சத்திலேயே சிறந்த இடம். ஏனென்றால் இங்குதான் மனிதன் இயல்பு நிலையை அடைவதற்கு மிகச் சிறந்த மிக உயர்ந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

7. ஆத்ம இயல்பு விழிப்பு




7. ஆத்ம இயல்பு விழிப்பு

``இயற்கையான முறையில் இயல்புணர்வை விழிப்படைய செய்வதன்மூலம் உடலின் செயல்பாட்டை தனது கட்டுக்குள் எடுத்துக் கொண்டு அதற்கான வழிமுறைகளைத் தரும்’’

இயல்பு ஞான முன்னேற்றத்தின் அடுத்தபடி இயல்பு விழிப்பாகும். ஆத்ம ஞானம் நம்முடைய நித்திய சொரூபம் தான் ஆனாலும் இயல்பு ஞானம் மட்டும் போதாது. ஆத்ம இயல்பு விழிப்புக்காக அயராது செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

உலகிற்கு முழுமுதற் காரணமும் அதன் இதயமுமாகிய பரம்பொருளை அடைய முயலும் முறையே இயல்பு விழிப்பாகும். மனிதன் பௌதீக மூலப் பொருள்களோடு கலந்து வாழ்ந்துவிட்ட நிலையை மாற்றி, தன்னைப் பிணைத்திருக்கும் தளைகளைப் பகுத்தறிவினாலும், தியானம், ஆத்ம பிரார்த்தனை, உண்மையான மாறாத பக்தி, அன்பு, சேவை, தொண்டு இவற்றின் சீரான பயிற்சியில் ஒவ்வொன்றாக அறிந்து இறுதியில் இயல்புணர்வை விழிப்படையச் செய்து அதன் சக்தியை அறிவது தான் இயல்பு விழிப்பு.

அறிவினால் அறிந்து இயல்பான சேவையில் முழு அனுபவம் பெறும்போது தான் இயல்புணர்வை அறியும். இந்த இயல்புணர்வுகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு, பகுக்கப்பட்டு, ஒருமைப்படுத்தப்பட்டு இயல்புணர்வை விழிப்படையச் செய்து சக்தியை கொடுக்கின்றது. இந்த சக்திக்கு விசார சக்தி என்று பெயர். இந்த சக்தியை நாம் பெரிதும் புறப்பொருளின் மீது செலுத்துவதால் நாம் வசதிகளைப் பெற்று அறியாமையில் வாழ்கின்றோம். இந்த சக்தியை அகமாக கொண்டு பார்த்தால் நம்முடைய ஆத்ம இயல்பை அறியமுடியும். இது நமது ஆத்ம இயல்பை அறிவதற்காக கொடுக்கப்பட்டுள்ள சக்தி. இந்த சக்தியை அதற்கு பயன்படுத்தாமல் புறப்பொருளில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்த சக்திக்கு தகுதி உடையவன் மனிதன். இந்த சக்தியை அறிந்து கொள்வதே மெய்யறிவாகும். இயல்புணர்வால் உண்மையைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்பவன், தன் உண்மையான தன்மையை ஆத்ம இயல்பு விழிப்புக்கான இந்தப் பிறப்பில் மெய்யறிவால் முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும். அறிவினால் அறிய முற்படும் ஒருவனுக்கு ஆத்ம இயல்பை அறியமுடியாது. இயற்கை அனுபூதி பெறவேண்டும் என்று எண்ணும் ஆத்ம இயல்பு விழிப்பு ஒன்றுதான் ஒரே சுலபமான வழி.

ஆத்ம இயல்பு விழிப்பு ஒன்றே விரும்பத் தகுந்தது. மற்றெல்லாம் இயல்பின் பொருட்டே அன்புக்குரியன ஆகின்றன. ஆத்ம இயல்பு விழிப்பைத் தெரிந்துகொண்டால் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டதாக அர்த்தம் ஆகும். காரியமாக விளைந்ததெல்லாம் காரணத்தில் அடங்கும்.

ஆத்ம இயல்பு விழிப்பில் நம் உண்மை °வரூபத்தை உணர்ந்த நாம் இன்பம் பெறுகிறோம். இந்த நிலையில் சாதகன் மனம் சுத்தமடைகிறது. திடத்தன்மையை அடைகிறது. அவன் அந்தப் பேரின்பமான நிலையில் தன்னை மறந்து, முழுமையாகக் கற்றுக்கொண்டு விட்டானானால், உயர்வுற்று உயரும் உண்மை அனுபவிக்கத் தெரிந்து கொள்ளப்படும். அப்போது உணர்விலே இயல்பை தெரிந்து கொள்ளப்படும் பொழுது மின்னற் கீற்றைப் போலப் பளீரென ஒளிர்கிறது. ஒரு கணத்தில் அது தன்னுடைய ஒளியைக் காண்பிக்கும். அதன் முழு உருவத்தையும் பார்ப்பது இயலாதது.

இயல்பு விழிப்பின் முதிர்ந்த நிலையில் உயிர் நரம்புகளின் வழியே இதய வெளிக்குள்ளே சென்று வருவது இயல்பாகிவிடுகிறது. மரண காலம் நெருங்கும்போது ஜீவன் (உயிர்) °ஷூமண நாடி வழியாகக் கபால வெளிச்சென்று சூரிய கிரணங்களோடு சேர்ந்த பிறகு அங்கிருந்து சூரிய லோகத்திற்கே சென்று விடுகின்றான். இந்த யாத்திரை இதோடு முடியவில்லை. அங்கிருந்து பிரம்மலோகம் வரை நீளுகிறது.

ஆத்ம இயல்பு விழிப்பின் தன் அனுபவத்தால் முதிர்ந்த நிலையில் ஒருவன் உலக பரிவர்த்தனத்திற்காகச் சராசரியான உடலுடன் தொடர்பு கொண்டவன்போல் நடந்து கொண்டாலும் உண்மையில் தான் யார் என்பதை தன் மனத்தினுள்ளே எக்காலத்திலும் உணர்ந்து இருக்கிறான். இதில்தான் மனித வாழ்க்கையில் தெய்வீகக் குறிக்கோளைப் பெறமுடியும்.

புலணுர்வு என்பது ஒலியைப் போன்ற வேகமுடையது. ஆத்ம இயல்பு விழிப்பின் சக்தி (இயல்புணர்வின் சக்தி) ஒளி வேகமுடையது. அதனால் தான் கர்மங்களை அழித்து விரைந்து இயல்பை அடையச் செய்கிறது.