Monday, September 5, 2011

8. இந்த மானிடப் பிறப்பை அறிதல்







8. இந்த மானிடப் பிறப்பை அறிதல்

``இயற்கை தனக்கே உரிய விதத்தில் பரிணாமத்தின் கடை நிலையில் மனிதன் இருக்கின்றான். இதனால் மானிடப் பிறப்பை விடுவித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது’’.

நாம் அனைவரும் ஆத்ம விழிப்பில் அனுபவம் அடைந்து தெய்வீகக் குறிக்கோளை அடைய இந்தப் பிறப்பை உணர்ந்து கொள்வது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.

இயற்கை உயிரினங்களை மேம்படுத்துவதில் நாட்டம் கொண்டுள்ளது. அதை அறிந்து கொள்ளவில்லை. மனித உயிரனத்தின் வடிவில் இயற்கை உருவாக்கியுள்ளது. மனிதன் தெய்வீகமானவன், நமது இயல்பு தெய்வீகம் என்பதுதான். எல்லா பிறவிகளையும்விட உயர்ந்தது மனிதப் பிறவி. இந்தப் பிறவியில் மட்டுமே இயல்புணர்வால் தன் இயல்பை உணரும் திறன் கிடைத்துள்ளது. வேறு எந்த உயிரினத்திற்கும் தன் இயல்புணர்வை அறியும் திறனில்லை. எனவே, மனிதன்தான் படைப்புகளிலேயே மிகச் சிறந்தவன்.

இந்த மானிடப் பிறப்பில் எல்லா முன்னேற்றமும் ஆற்றல்களும் ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்கனவே உள்ளன. அது தன் போக்கில் வெளிப்படுவது தடுக்கப்படுகிறது அவ்வளவு தான். இந்தத் தடைகளை நீக்கினால் இயற்கை முன்னே பாய்கிறது. அவன் தன்னிடம் ஏற்கனவே உள்ள ஆற்றல்களை அடையப் பெறுகின்றான்.

நாம் எவ்வளவோ பிறவிகள் எடுத்தாகிவிட்டது. இதற்கு முன் பிறவிகளில் நாம் ஞானம் சம்பாதிக்கவில்லையா? என்று கேட்டால் சம்பாதித்திருந்தால் நாம் இப்போது பிறவி எடுத்திருக்க முடியாது. ஆகவே நாம் எல்லாம் ஞானிகள் அல்ல என்றால் நாம் என்ன அவ்வளவு முட்டாள்களா? நாம் முட்டாள்களும் இல்லை. எதற்கும் நிறையத் தகுதிகள் வேண்டும். மனிதனுக்கு மனிதப் பிறவி என்பதே விசேஷம். நாம் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். புழுவாய், விலங்காய், பறவையாய், மனிதனாய் இப்படி மாறி மாறிப் பிறவிகள் எடுத்துள்ளோம். இந்தப் பிறப்புகளில் மனிதப் பிறப்பும் கிடைத்திருக்கலாம். ஆனால் அதில் சரியான விழிப்புணர்வு இன்மையால் திரும்பவும் இம்மனிதப் பிறப்பு பரம்பொருளின் அருளால் கிடைத்திருக்கின்றது. இந்தமானிடப் பிறப்புக்குப் பிறகும் ஜன்மம் வருவதற்கு நியாயமே இல்லை. அப்படிப்பட்ட உயர்ந்த இந்த மானிடப் பிறப்பின் உண்மையான நிலையை அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். நம் உண்மையான °வரூபம் ஆத்மாவின் இயல்புதான். நாம் இயல்பை மேலோட்டமாகப் பார்ப்பதால் நமக்கு ஒரு பயனுமில்லை. நாம் பரம்பொருளின் இயல்பின் வெளிப்பாடுகள் இந்த இயல்புகளின் மிகச் சிறந்த நிலையே மனிதன்.

மனிதன் தன் செயல்களினால் தானே தன்னை உத்தமனாக்கிக் கொள்ளலாம். அல்லது தன்னைக் கெடுத்துக் கொள்ளவும் செய்யலாம். இவ்வாறு செய்வதற்கு எல்லாம் மனிதனுக்குப் பகுத்தறிவு உண்டு. வேறு எந்த ஜீவனுக்கும் இவ்விதப் பகுத்தறிவு கிடையாது. ‘இது நல்லதுஎன்று புரிந்து கொண்டு அதைச் செய்யும் தகுதியோ, ‘இது தவறுஎன்று புரிந்து கொண்டு ஒரு செயலைத் தவிர்க்கும் தகுதியோ மற்றப் பிராணிகளுக்குக் கிடையாது. அதனால் மனிதப் பிறப்பில் இயல்பை அறியும் முயற்சியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். நமக்குக் கிடைத்த இந்த மானிடப் பிறப்பை நன்கு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் இருக்கும் இயல்பை அறிவால், நினைவால் உணருங்கள்; அதனால் அறிவு தெளிவடையும்; அறியாமை அகலும்.

நானே ஆத்மா, அதன் இயல்பே நான்எனச் சொல்லுங்கள். அதுதான் உண்மை. உலகில் எல்லையற்ற ஆற்றல் உங்களுக்கே சொந்தமானது. மூடநம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். உண்மையை அறியுங்கள். உண்மையை கடைப்பிடிக்கும் வழிகளிலேயே சென்று கொண்டிருங்கள், இயல்பை அடையும் வரை.

இந்த மனிதப் பிறவிதான் நமக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு. இந்த மானிடப் பிறப்பில்தான் பிறவி இல்லாப் பெரு நிலையை அடைய முடியும். மற்ற எந்த ஜீவராசிகளும் இந்த நிலையை அடைய முடியாது. அப்படிப்பட்ட மிக உயர்ந்த நிலைக்காக நிறைவுடன் செயல்பட்டுக் கொண்டே இருப்போம்.

இந்த உலகம்தான் பிரபஞ்சத்திலேயே சிறந்த இடம். ஏனென்றால் இங்குதான் மனிதன் இயல்பு நிலையை அடைவதற்கு மிகச் சிறந்த மிக உயர்ந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment