Monday, September 5, 2011

9. ஆத்ம இயல்பு விடுதலை


9. ஆத்ம இயல்பு விடுதலை

``நான் என்ற இயல்பை நீ உணர்ந்து `நான்என்று நீ இயல்போடு ஒன்று கலப்பது’’.

இயற்கை தனக்கே உரிய விதத்தில் பரிணாமத்தின் இடைநிலையில் மனிதன் இருக்கின்றான். இதனால் இந்த மானிடப் பிறப்பை அறிந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

இயற்கையோடு போராடிக் கொண்டிருக்கும் வரைதான் மனிதன் இன்பதுன்பம் எல்லாம். இயற்கையோடு இயல்பை நோக்கி குவியும் போது ஓர் நிஜமான அனுபவம் ஏற்பட்டு நமது பார்வை உள்முகமாக சென்று உங்களுக்குள் நீங்கள் செல்லும் போது ஆத்ம இயல்பு நிலையை அறியச் செய்கிறது. இதுதான் நிலையான இயல்பு நிலையை அடைவதற்கான வாயில் வேறு ஒன்றும் கிடையாது. ஆகையினால் உங்களுக்குள் நீங்கள் பயணம் செய்யத் துவங்குங்கள். இந்த இயல்பு நிலையில் உள்ள உண்மையான இயல்பைப் பற்றி நமக்கு தெரியவரும். இதனால் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு அது உதவுகின்றது.

உங்கள் ஆத்ம இயல்பு எப்போதும் மாறுவதில்லை. அது மறைக்கப்பட்டு இருக்கின்றது அவ்வளவுதான். உடல் ஒருபொருள், மனம் வேறு பொருள் என்று சொல்வதற்கு இல்லை. அவை ஒரே பொருளின் வேறுப்பட்ட நிலைகள்தான். அதுபோல நமது இயல்பும் பரம்பொருளின் இயல்பும் வெவ்வேறு என்று அல்ல இவை ஒரே பரம்பொருளின் வேறுபட்ட நிலைகள்தான்.

                பரம்பொருளின் இயல்பின் வெளிப்பாடுகள் இந்த இயல்புகளின் மிகச்சிறந்த நிலையே மனிதன். அங்கிருந்து வந்த இந்த இயல்பு திரும்பிக் சென்றேயாக வேண்டும். அவரைப் பரம்பொருள் என்றோ, கடவுள் என்றோ, சுத்த பிரம்மம் என்றோ, நிலையான இயல்பு நிலை என்றோ கூறிக் கொள்கின்றோம். இந்த இயல்பு நிலையை அறிவதுதான் பரிணாமத்தின் உண்மை ரகசியம்.

ஆத்ம இயல்பு நிலையின் விடுதலை என்பது ஒலி, ஒளி, உருவம், சுவை, தொடு, உணர்ச்சி அனைத்தையும் கடந்து இயற்கையையும் கடந்து தனிப்பொருளாக எல்லையற்றதாக ஆதி அந்தம் இல்லாததாக மாறுதலே அடையாததாக உள்ள பரம்பொருளை உணர்ந்து ஐக்கியமாவதும் ஆகும். இதன் கருத்து நம் அறிவுக்கு எல்லாம் அப்பாற்பட்டதாகும். நுட்பத்தின் மிக நுட்பமானதும், சூட்சுமத்தில் சூட்சமமானதுமாகும்.

       தண்ணீரினுடைய நிலையில் இருந்து பார்த்தால் அலைக்குள் இருப்பதும் சமுத்திரத்திற்குள் இருப்பதும் தண்ணீர் தான். சமுத்திரத்தின் நிலையை இருந்து பார்த்தாலும் இரண்டும் ஒன்றேதான். அங்கே சமுத்திரமும் இல்லை, அலையும் இல்லை. ஆனால் அலையினுடைய நிலையில் இருந்துப் பார்த்தால் உங்களுக்கு தண்ணீரே கிடையாது தெரிந்து கொள்ளுங்கள், தண்ணீர் தெரிந்தால் தான் விஷயம் பூராவும் மாறிப் போய்விடுகிறது. அலையினுடைய நிலையில் இருந்து பார்க்கும் பொழுது நீங்கள் சின்ன அலை அல்லது பெரிய அலை நீங்கள் அலை என்று நினைக்கிற வரைக்கும் உங்களுக்கு சமுத்திரம் இருக்கிறது. அலைக்கான பாவத்தை வைத்துக் கொண்டு இயல்பை அறியமுடியாது. தண்ணீராக ஆகிவிடும் போதுதான் நமது இயல்பால் அவரை அடைவது அதாவது இயல்பான நிலையை அடைவது சாத்தியமாகும். சமுத்திரத்தின் உட்பொருளையும் சேர்த்து தெரிந்து கொள்வது இயல்பு நிலை.

                இதன் உட்பொருள் தண்ணீர் °வரூபத்தை அடையும். அதுபோலப் பகுத்தறிவு, தியானம், ஆத்ம பிரார்த்தனை, உண்மைக்கு மாறாத பக்தி, அன்பு, சேவை, தொண்டு இவற்றின் சீரான பயிற்சியால் பிரகாச நிலைக்கு அப்பால் வந்த ஒரு மெய்ப் பொருளுடன் ஒன்றி நிற்கும் வாழ்க்கை பெறப்படுகிறது. அந்த வழியில் சாதகன் ஒவ்வொரு நிலையாக நிறைவடைகிறான். நிலையில்லா அற்ப சந்தோஷத்தில் இருந்து விடுபடுகிறான். திடத் தன்மை அடைகிறான். அவன் எந்த பேரின்பமான நிலையில் தன்னை மறந்து முழுக்கக் கற்றுக்கொண்டு விட்டானானால் உயர்வற்ற உயரும் உண்மையை அனுபவிக்கத் தொடங்குகின்றான்.

                இந்த நொடி உணர்வுதான் சுத்த தன் இயல்பு அல்லது மெய்ப்பொருளைப் பற்றிய பாதிப்பற்ற சிந்தனையைத் தரமுடியும். அந்த இயல்பு அனுபவம்தான் வாழ்க்கையில் தெய்வீக குறிக்கோளைப் பெறுவதாகும்.

                இயல்பு என்பது இரண்டல்ல ஒன்றுதான். அறிகின்ற இயல்பும், அறிய வேண்டிய இயல்பும் ஒன்றாக இயல்புநிலை. நம்முடைய தூய இயல்புணர்வால் தன் சொரூபத்தை அறிந்து கொண்ட பிறகு அதிலேயே நிலைத்திருப்பது சிறப்பு. மெய்ப் பொருளின் இயல்பை தனது இயல்பின் இயல்பாக தனது இயல்பை காண்பவர் யாரோ அவரே சுதந்திரமானவர், ஆனந்தமயமானவர். குறிக்கோளை அடைந்தவர்தான் இந்த நிலையே இயல்பு நிலை. இந்த நிலையில் பிறப்பற்ற நிலையை அடையலாம், பிறவி பெரும் பயனை அடையலாம்.

                ஆத்ம இயல்பை சிந்தனை செய்து அவரை அனுபவரீதியாக உணர்வதையே நமது வாழ்வின் குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது `நாம் உண்மையில் இரண்டற்ற பரம்பொருள்என்று நேரிடையாக அறிந்து இந்த ஜன்மத்தையே கடைசி பிறவியாக்கிக் கொள்ள நாம் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் நாம் மனிதனாக இருக்கும், என்று சாதகன் உணர்ந்து நம்மிடம் உள்ள குண்டலினிச் சக்தியை விழிப்படையச் செய்து, மாயையில் இருந்து விடுபட்டு ஆத்மாவை அறிந்து, ஆத்ம இயல்பு விடுதலைக்காக அயராது செயல்பட வேண்டும்.

``நாம் அவரிலிருந்தே தோன்றினோம், அவரிலேயே வாழ்கின்றோம். அவரிடமே திரும்புவோம்’’.

No comments:

Post a Comment