Monday, September 5, 2011

6. ஆத்ம இயல்பு ஞானம்


6. ஆத்ம இயல்பு ஞானம்

``இயற்கை செயல்பட்டுக் கொண்டுள்ள விதத்திற்கு இயல்பான செயல்முறையில் தன் இயல்பை அறிவதே ஆத்ம இயல்பு ஞானம் ஆகும்.

இயற்கை தத்துவத்தில் தானேஞானம்என்று உணர்ந்து கொண்டுவிட்டான். அவன் உணர்வு பற்றிய அறிவு ஆத்மாவைப் பற்றிய அறிவாகும். அதாவது அவன் தன் எண்ணங்களை உணர்வது போன்ற முறையில் அந்தப் பொருளை உணரவில்லை. ஆனால் அவன் ஞானமாகவே மாறி நின்றான். ஆத்ம இயல்பு ஞானம் என்பது தன்னைத்தானே அறிதல் ஆகும். இயற்கை தத்துவத்தின் முன்னேற்றத்துக்கு இன்றியமையாத ஆத்ம இயல்பு மெய்யறிவைப் புகட்டுகிறது.

தன்னைப் பற்றிய அறிவு எது உண்டோ அதை ஒருவன் சம்பாதித்தால் அது ஞானமாகும். தன் இயல்பு நிலையை அறிதலே இயல்பு ஞானமாகும். இயற்கை எல்லாவற்றையும் கடந்து நிற்கின்றது. ஆத்ம இயல்பு ஞானம் அடைந்தவன் எப்பொழுதும் இன்பத்தில் திளைக்கின்றான்.

அழுக்கு சேர்ந்த பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் நாம் குடிக்க மாட்டோம்; தூய்மையான பாத்திரத்தில் வைத்திருந்தால்தான் நாம் குடிப்போம். அதுபோல தூய மனதில் இயற்கை தத்துவத்தைப் பற்றிய கருத்துகள் தெரியச் செய்தால் அங்கு ஆத்ம இயல்பு ஞானம் ஏற்படும்.

அறியாமை என்ற சேற்றில் ஆழ்ந்திருக்கும் ஜீவன் மனத்துடனும் அதனுடைய கோணல்களுடனும் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டுவிட்ட உயிர் இறுதியில் மரணவேளைகளில் புலன்கள் மனத்தில் ஒடுங்குகின்றன. செவி அல்லது கண் அல்லது மற்றப் புலன்களின் வழியாகத் தப்பிச்சென்று சராசரி மனிதனைப்போல் அந்த இயல்பு வினைக்கு ஏற்றவாறு சுழன்று கொண்டு இருக்கின்றது. ஆனால் இயல்பு ஞானம் அடைந்தவர் உயிர் கபாலத்தின் வழியாகப் பிரிகின்றது. இதுவே பிறவியில்லாப் பெரு நிலையாகும்.

நாம் நம்மை மிகவும் நேசிக்கிறோம். இது நாம் அன்றாடம் செய்யும் செயல்களில் வெளிப்படுகிறது. நம் செய்கைகளெல்லாம் உண்மை கசப்பதாகவும், உண்மைக்கு மாறுபட்டவை இனிப்பதாகவும் இருக்கின்றன. இந்த அறியாமையால் நம் நேரத்தையும் பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கின்றோம். ஆத்ம இயல்பு ஞானம் ஏற்பட நாம் எல்லாவற்றையும் அதனை சார்ந்து சாதனை செய்ய வேண்டும். மாயையில் இருக்கும் வரை நாம் ஆசைகள் கொண்டுதான் வாழ முடியும். பந்தம் என்பது அறியாமையினால் வந்தது. ஆகவே அந்த அறியாமையை அகற்றினால் பிறகு பந்தம் விலகித் தன்னை அறியமுடிகிறது.

மனித பிறவியில் என்ன சிறப்பு? மனிதனைப் போல்தான் பிராணிகளும் உள்ளன எனச் சிலர் நினைப்பதுண்டு. பிராணிகளும் சாப்பிடுகின்றன, தூங்குகின்றன, சுற்றுகின்றன. இவற்றை யெல்லாம் நாமும் செய்கின்றோம். ஏதாவது ஒருநாள் அவை இறந்து விடுவதுபோல நாமும் இறந்து விடுவோம். ஆனால் பிராணிகளுக்கு தான் எங்கு போய்ச் சேர்வோம் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இந்த மனிதப் பிறவியில் சிந்திக்கும் திறன் கொண்டுள்ளோம். இந்த சிந்தனை மூலம் நம்மைப் பற்றி அறிந்து கொள்வதே ஆத்ம இயல்பு ஞானம் ஆகும்.

       அறிவில் சிறந்து விளங்கும் பண்டிதர்கள், அறிஞர்கள், திறமையில் உயர்ந்தவர்களுக்கு இவையெல்லாம் தமக்குப் புகழை உண்டாக்கப் பயன்படுமே தவிர இயல்பு ஞானத்திற்குப் பயன்படாது. நமக்கு ஏன் இயல்பு ஞானம் ஏற்படவில்லை எனில் இயற்கையைப் பற்றிய அறியாமைதான் காரணம். இதை போக்குவதுதான் விவேகம். இயல்பு ஞானத்திற்காக நாம் விவேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இயல்பு ஞானத்தை மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்டு வைராக்கியத்துடன் செயல்பட்டால்தான் நாம் முன்னேற முடியும்.

எப்பொழுது இயல்புணர்வுகள் °வரூபத்தில் நினைத்திருக்கிறீர்களே அப்போதுதான் ஆத்ம இயல்பு ஞானம் ஏற்படும்.

No comments:

Post a Comment