Monday, September 5, 2011

1. ஆத்ம இயல்பு முன்னுரை



ஆத்ம இயல்பு முன்னுரை

          ஆத்ம இயல்பு நிலைக்காக நாம் செய்யும் ஆத்ம யாத்திரைக்கு அழைத்துச் செல்லும் இந்நூல், ஒரு வழிகாட்டும் பலகையாக உள்ளது.

    நம்முடைய ஆத்மா பல பிறப்புகளின் இறுதியில் மனிதப்பிறப்பு கிடைத்துள்ளது. இந்த அரிய மனிதப் பிறப்பில் சிந்திக்கும் திறன் உள்ளது. ஆனாலும் நாம் இயல்பைப் பற்றிய மெய்ச் சிந்தனையின்றி இருக்கின்றோம். நம்முடைய இயல்புணர்வை அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். நமது ஆத்ம இயல்பு மாயையால் முழுவதும் உணரமுடியாமல் மறைக்கப் பட்டுள்ளது. இந்த ஆத்ம யாத்திரையில் நமக்குள்ளேயே இருக்கின்றது என அறியும் வழி கிடைக்கின்றது.

          இயற்கையில் எல்லையற்ற சக்தியுள்ளது. ஒருவர் அதை உணரும் திறத்தைப் பொருத்தே வெளிப்படுகிறது. இதன் போக்கை உணர்ந்தவர்களே தங்கள் வாழ்வையும், நாட்டின் வாழ்க்கையும் காப்பாற்றுகிறார்கள்.

            சன்னியாசத்தை மேற்கொள்ளாமல் எந்த முறையிலும் மேன்மையான யோக நிலைகளை அடைய முடியாது என்பது இயற்கைக்கு மாறுபட்ட கருத்தாகும். இல்லற வாழ்க்கையிலேயே முதலிருந்து கடைசிவரை இருந்துக் கொண்டு ஆத்ம உச்சநிலையின் சாதனைகளை அடைய முடியும்.

            இயற்கையின் அந்த இயல்பான ஓட்டத்தில் லயத்தில் இணைந்து விடுவது நல்லது. இது இயல்பு நிலைக்கு அழைத்துச் செல்லும், வழிகாட்டும் எத்தனை நுட்பமான உண்மை இது.

                    இந்தச் செய்திகளின் ஓர் சாரம்.

                   “படித்து விளக்கம் பெறுவோம்”.

                   “நம் இயல்புணர்வு மூலம் உணர்ந்து நமது இயல்பை அறிவோம்’’.

             “ஆத்ம இயல்பு நிலையை அறிந்து அனுபவித்து விளக்கம் பெற்றுக் கொண்டே இருப்போம்.

- எ.எ.எ. சென்டர்

No comments:

Post a Comment