Monday, September 5, 2011

5. இயற்கை



5. இயற்கை

``நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை உணரும்போது, உங்களுடைய உணரும் இயல்புணர்வு சுயமாக வளர்ந்து தன் இயல்பை வெளிப்படுத்தும்’’.

இயற்கையின் இயல்பு அறிவை இயற்கை ஏற்படுத்துகின்ற அனுபவம் மூலமாக மட்டுமே பெற முடியும், வேறு வழியில்லை.

இயற்கையில் இருந்து விலகும்போது மனிதர்களிடையே கவலையும் போராட்டங்களும் வருகின்றன. ஆதிகாலத்தில் இருந்தே இயற்கையை கடவுளாக வணங்கி வந்துள்ளனர். நாகரிகங்களும், கலாச்சாரங்களும் இயற்கையை மையமாக கொண்டுள்ளன. இயற்கையை கவனிக்கும் போதுதான் பல விஷயங்கள் நமக்கு புலனாகின்றன. இயற்கையை உள்ளது உள்ளபடியே அறிதல் சிறப்பு இது. முடிவுமில்லாத மிகப்பெரிய துறையாகும். இது காலத்திற்கு அப்பாற்பட்டது. எனவே மாறாதது, மாற்றப்பட முடியாதது. அது ஒப்புணர்வற்ற மெய்ப்பொருளின் தத்துவமேயாகும்.

இயற்கையோடு ஒன்றும்போது மனதில் ஒரு நிறைவு வந்து சேர்கின்றது. இனிய தென்றல் வீசுவது, காலையில் சூரிய உதயம் போன்ற அனைத்தும் இயற்கையோடு ஒன்றும்போது நம்மை நிறைவு ஆட்கொள்கின்றது. இயற்கையின் இரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியாலேயே ஜீவராசிகளை ஆராய்ந்து அவை ஒவ்வொன்றுக்கும் தொடர்பை ஏற்படுத்தி, சூழ்நிலையை சமாளித்து வாழ்கின்றான என்பதை அறியும் போதும், மிகத் தாழ்ந்தது முதல் மிக உயர்ந்தது வரை எல்லா பிராணிகளும் இயல்புணர்வுடன் தான் வாழ்கின்றன என்பதை அறியமுடிகிறது
.
ஜீவராசிகளுக்கு எதையும் அதிகம் கற்றுக்கொள்ளவோ, தெரிந்து கொள்ளவோ அதிக நாட்டமில்லை. அது தன் இயல்புணர்வுக்கு ஏற்றவாறு வாழ்கின்றன. மீன் குஞ்சுகள் வெளியில் வந்தவுடன் நீந்துகின்றன. அது எப்படி, ஆடுமாடுகளும் கன்றை ஈன்றவுடன் சிறிது நேரத்தில் குதித்து நடக்கின்றன. அது எப்படி, கோழி குஞ்சுகள் பருந்தை கண்டவுடன் தாயை அனைத்துக் கொள்கின்றன. அது எப்படி, இதற்கு எல்லாம் காரணம் அதனிடமுள்ள இயல்புணர்வேயாகும். ஒவ்வொரு ஜீவராசி களுக்கும் ஒவ்வொருவிதமான இயல்புணர்வைக் கொண்டு படைத்துள்ளார், என்பது திண்ணம். எல்லா ஜீவராசிகளும் அதன் இயல்புணர்வுடன் வாழ்கின்றன.

மனிதனுக்கு இந்த இயல்புணர்வை உணரும் சக்தியைக் கொண்டு படைத்துள்ளார், மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் இயல்புணர்வை உணரும் ஆற்றல் இல்லை. அவைகள் இந்த இயல்புணர்வோடு அதற்கு ஏற்ப வாழ்கின்றன. ஆனால் மனிதன் இதனை அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். மனிதனுக்கு பெரிதும் புறப்பொருளின் அதிக பற்றுயிருப்பதால் இதை உணர முடியாமல் இருக்கின்றான்.

இந்த இயல்புணர்வு பகுத்தறிவைக் கடந்தது. இந்த சூட்சம நிலையில் நம்மை ஆக்கிரமிற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் நுண்ணிய சம°காரங்கள் சித்தத்தில் மறைந்திருக்கின்றன. இதை இயல்பாக அறியும் விஷயம், சிக்கலான வடிவத்தை உங்களால் எளிதாக உருவாக்க முடியாது. இயற்கையை கவனிக்க கவனிக்க தன் இயல்புணர்வைப் பற்றிய கவனம் ஏற்படுகிறது. நாம் பெரிதும் புறப்பொருளின் மீது அதிக கவனம் செலுத்தி அறியாமையில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். நமது பார்வையை இயற்கையோடு ஒன்றி அகமாக ஆராயும்போது இந்த இயல்புணர்வை அறியமுடிகிறது. இந்த உணர்வை உணரும் ஆற்றல் மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. எனவே இதை அறிவது மிக அவசியம். இயல்புணர்வல் தான் தன் இயல்பு நிலையை அறியமுடியும். இதுதான் சிறந்த வழி. இதனை புறப்பொருளால் அறியமுடியும் என்று நமது வாழ்நாளை கடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இயற்கையிலுள்ள பல்வேறு விஷயங்களை மனம் தியானிக்கும் போது நம் உணர்வு நம்மிடமுள்ள இயல்புணர்வை அறிய செய்யும். இதை அறியும் போது மனத்தில் உள்ள கசடுகள் எல்லாம் சிறிது சிறிதாக வெளியேறும். இது மனத்தின் நிலையை மாற்றி சத்வ நிலைக்கு எடுத்துச் செல்லுகின்றது. இது மனத்தின் அலைகளை அடக்கியாளுகின்றன. அமைதியோ அதன் உயர்ந்த நிலை சிறந்த வெளிப்பாடு ஒரு நிலையில் மனம் அமைதி அடையும். அப்போது தன் இயல்புணர்வு விழிப்படைந்து சக்தியை கொடுக்கின்றது. இந்த இயல்புணர்வே முக்திக்கு முதற்படி.

``இயற்கையில் இருக்கும் கடவுள் இயற்கையாகிறார். இயற்கையாகவே ஆன கடவுள் இயல்புணர்வை கொண்டு படைத்துள்ளார். இவரே தன் ஆத்ம இயல்பை நமக்கு காட்டுகின்றார்’’.

No comments:

Post a Comment