Monday, September 5, 2011

7. ஆத்ம இயல்பு விழிப்பு




7. ஆத்ம இயல்பு விழிப்பு

``இயற்கையான முறையில் இயல்புணர்வை விழிப்படைய செய்வதன்மூலம் உடலின் செயல்பாட்டை தனது கட்டுக்குள் எடுத்துக் கொண்டு அதற்கான வழிமுறைகளைத் தரும்’’

இயல்பு ஞான முன்னேற்றத்தின் அடுத்தபடி இயல்பு விழிப்பாகும். ஆத்ம ஞானம் நம்முடைய நித்திய சொரூபம் தான் ஆனாலும் இயல்பு ஞானம் மட்டும் போதாது. ஆத்ம இயல்பு விழிப்புக்காக அயராது செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

உலகிற்கு முழுமுதற் காரணமும் அதன் இதயமுமாகிய பரம்பொருளை அடைய முயலும் முறையே இயல்பு விழிப்பாகும். மனிதன் பௌதீக மூலப் பொருள்களோடு கலந்து வாழ்ந்துவிட்ட நிலையை மாற்றி, தன்னைப் பிணைத்திருக்கும் தளைகளைப் பகுத்தறிவினாலும், தியானம், ஆத்ம பிரார்த்தனை, உண்மையான மாறாத பக்தி, அன்பு, சேவை, தொண்டு இவற்றின் சீரான பயிற்சியில் ஒவ்வொன்றாக அறிந்து இறுதியில் இயல்புணர்வை விழிப்படையச் செய்து அதன் சக்தியை அறிவது தான் இயல்பு விழிப்பு.

அறிவினால் அறிந்து இயல்பான சேவையில் முழு அனுபவம் பெறும்போது தான் இயல்புணர்வை அறியும். இந்த இயல்புணர்வுகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு, பகுக்கப்பட்டு, ஒருமைப்படுத்தப்பட்டு இயல்புணர்வை விழிப்படையச் செய்து சக்தியை கொடுக்கின்றது. இந்த சக்திக்கு விசார சக்தி என்று பெயர். இந்த சக்தியை நாம் பெரிதும் புறப்பொருளின் மீது செலுத்துவதால் நாம் வசதிகளைப் பெற்று அறியாமையில் வாழ்கின்றோம். இந்த சக்தியை அகமாக கொண்டு பார்த்தால் நம்முடைய ஆத்ம இயல்பை அறியமுடியும். இது நமது ஆத்ம இயல்பை அறிவதற்காக கொடுக்கப்பட்டுள்ள சக்தி. இந்த சக்தியை அதற்கு பயன்படுத்தாமல் புறப்பொருளில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்த சக்திக்கு தகுதி உடையவன் மனிதன். இந்த சக்தியை அறிந்து கொள்வதே மெய்யறிவாகும். இயல்புணர்வால் உண்மையைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்பவன், தன் உண்மையான தன்மையை ஆத்ம இயல்பு விழிப்புக்கான இந்தப் பிறப்பில் மெய்யறிவால் முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும். அறிவினால் அறிய முற்படும் ஒருவனுக்கு ஆத்ம இயல்பை அறியமுடியாது. இயற்கை அனுபூதி பெறவேண்டும் என்று எண்ணும் ஆத்ம இயல்பு விழிப்பு ஒன்றுதான் ஒரே சுலபமான வழி.

ஆத்ம இயல்பு விழிப்பு ஒன்றே விரும்பத் தகுந்தது. மற்றெல்லாம் இயல்பின் பொருட்டே அன்புக்குரியன ஆகின்றன. ஆத்ம இயல்பு விழிப்பைத் தெரிந்துகொண்டால் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டதாக அர்த்தம் ஆகும். காரியமாக விளைந்ததெல்லாம் காரணத்தில் அடங்கும்.

ஆத்ம இயல்பு விழிப்பில் நம் உண்மை °வரூபத்தை உணர்ந்த நாம் இன்பம் பெறுகிறோம். இந்த நிலையில் சாதகன் மனம் சுத்தமடைகிறது. திடத்தன்மையை அடைகிறது. அவன் அந்தப் பேரின்பமான நிலையில் தன்னை மறந்து, முழுமையாகக் கற்றுக்கொண்டு விட்டானானால், உயர்வுற்று உயரும் உண்மை அனுபவிக்கத் தெரிந்து கொள்ளப்படும். அப்போது உணர்விலே இயல்பை தெரிந்து கொள்ளப்படும் பொழுது மின்னற் கீற்றைப் போலப் பளீரென ஒளிர்கிறது. ஒரு கணத்தில் அது தன்னுடைய ஒளியைக் காண்பிக்கும். அதன் முழு உருவத்தையும் பார்ப்பது இயலாதது.

இயல்பு விழிப்பின் முதிர்ந்த நிலையில் உயிர் நரம்புகளின் வழியே இதய வெளிக்குள்ளே சென்று வருவது இயல்பாகிவிடுகிறது. மரண காலம் நெருங்கும்போது ஜீவன் (உயிர்) °ஷூமண நாடி வழியாகக் கபால வெளிச்சென்று சூரிய கிரணங்களோடு சேர்ந்த பிறகு அங்கிருந்து சூரிய லோகத்திற்கே சென்று விடுகின்றான். இந்த யாத்திரை இதோடு முடியவில்லை. அங்கிருந்து பிரம்மலோகம் வரை நீளுகிறது.

ஆத்ம இயல்பு விழிப்பின் தன் அனுபவத்தால் முதிர்ந்த நிலையில் ஒருவன் உலக பரிவர்த்தனத்திற்காகச் சராசரியான உடலுடன் தொடர்பு கொண்டவன்போல் நடந்து கொண்டாலும் உண்மையில் தான் யார் என்பதை தன் மனத்தினுள்ளே எக்காலத்திலும் உணர்ந்து இருக்கிறான். இதில்தான் மனித வாழ்க்கையில் தெய்வீகக் குறிக்கோளைப் பெறமுடியும்.

புலணுர்வு என்பது ஒலியைப் போன்ற வேகமுடையது. ஆத்ம இயல்பு விழிப்பின் சக்தி (இயல்புணர்வின் சக்தி) ஒளி வேகமுடையது. அதனால் தான் கர்மங்களை அழித்து விரைந்து இயல்பை அடையச் செய்கிறது.

No comments:

Post a Comment